1. செய்திகள்

உ.பி.,யில் MFOI Samridh Kisan Utsav- வருகை தரும் ஒன்றிய இணை அமைச்சர்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MFOI Samridh Kisan Utsav in Lakhimpur- UP

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூரில் நடைபெற உள்ள MFOI சம்ரித் கிசான் உத்சவுக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு நடைப்பெற உள்ளது.

MFOI நிகழ்வின் முன்னோட்டம்:

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் வருகிற பிப்ரவரி 23, 2024 அன்று, உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூரில் சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வின் கருப்பொருளாக, நெல் பயிரில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, தினை சாகுபடி, டிராக்டரில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் டிராக்டர் பராமரிப்பு போன்றவை குறித்த கருத்தரங்குகள் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமை விருந்தினர்: உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெறும் MFOI சம்ரித் கிசான் உத்சவ் விழாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்கிற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

மேலும், ஒரு நாள் நிகழ்வாக நடைப்பெற உள்ள இந்த நிகழ்வில் வேளாண் தொடர்பான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முன்னணி நிறுவனங்கள் விவசாயிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளது.

MFOI சம்ரித் கிசான் உத்சவ் ஸ்பான்சர்கள்:

SBI, CEAT மற்றும் GSP Crop Science Private Limited உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வின் ஸ்பான்சர்களாக தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர்வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

Gold rate hike- தொடர் ஏறுமுகத்தில் தங்கம்: இன்றைய விலை எவ்வளவு?

இந்திய மண்ணில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை வறண்டுவிட்டன- MFOI நிகழ்வில் SML இயக்குநர்

English Summary: MFOI Samridh Kisan Utsav is scheduled in UP Lakhimpur on Feb 23 Published on: 19 February 2024, 01:08 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.