1. செய்திகள்

விவசாயிகளை கௌரவிக்கும் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வை 3 மாநிலங்களில் நடத்த ஏற்பாடு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MFOI Samridh Kisan Utsav

MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

MFOI 2024 நிகழ்வுக்கான முன்னோட்டம்:

2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு இந்தியாவின் பல பகுதிகளில் கிரிஷி ஜாக்ரன் சார்பில் நடைப்பெற்று வருகிறது.

MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு:

அந்த வகையில் மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு நடைப்பெற உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

  • ஜான்சி (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 5
  • சோலாப்பூர் (மகாராஷ்டிரா)- மார்ச் 7
  • சதாரா (மகாராஷ்டிரா)- மார்ச் 12
  • ஹப்பூர் (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 12
  • மார்ச் 13- மீரட் (உத்தரப் பிரதேசம்)
  • மார்ச் 15- கோலாப்பூர் (மகாராஷ்டிரா)
  • பாரூச் (குஜராத்)- மார்ச் 18
  • கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 19
  • ஷாம்லி (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 19
  • வாரணாசி (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 21
  • சஹாரன்பூர் (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 27
  • பிஜ்னோர் (உத்தரப் பிரதேசம்)- மார்ச் 29

சமீபத்தில் உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூரில் முடிவடைந்த MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் பங்கேற்று இருந்தனர். விவசாயிகள் தங்கள் விளைச்சலை அதிகரிப்பது, நெற்பயிர்களில் பூச்சி மற்றும் நோய் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் டிராக்டரில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தினை விவசாயத்தில் புதுமைகளைத் தழுவுவது போன்றவை குறித்து அறிவியல் அறிஞர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MFOI 2024 விருதுக்கு விண்ணப்பிக்க க்ளிக் செய்க

Read more:

நெல் மற்றும் சோளம் பயிரில் TNAU வெளியிட்ட புதிய இரகங்களின் சிறப்பம்சம் என்ன?

நெல்லில் விதை உறக்கம்- என்ன செய்து நீக்கலாம்? வல்லுநர்களின் விளக்கம்

English Summary: MFOI Samridh Kisan Utsav will be held 3 states in upcoming March Published on: 27 February 2024, 04:01 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.