அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தற்போது மினிமம் பேலன்ஸ் லிமிட்டை அதிரடியாகக் குறைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ, நாடு முழுவதும் 21,959 கிளைகளைக் கொண்டுள்ளது. 45 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட, வங்கியில் 44 கோடி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மினிமம் பேலன்ஸ் (Minimum balance)
-
வங்கி தற்போது கொண்டுவந்துள்ள புதிய விதிகளின்படி, மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ்ஸாக வைத்திருக்க வேண்டும்.
-
அதேநேரத்தில் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்கள், 1,000 ரூபாய் வைத்திருந்தால் போதுமானது.
அபராதத் தொகை (Fine)
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டியும், புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டியும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியில் இருக்கும் தற்போதைய விதிகளின்படி,எஸ்.எம்.எஸ் சேவைக்கான கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்த நாணயம் உங்கள்ட இருக்கா? சீக்கிரம் தேடுங்க..! இருந்தா நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!
வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் - விபரம் உள்ளே!
Share your comments