தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் (NFSM) கீழ் ஆலோசகர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் புரோகிராமர் ஆகிய பதவிகளுக்கு DA&FW இன் பயிர்ப் பிரிவு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் அமைச்சகம் 2022: காலியிட விவரங்கள்
ஆலோசகர்-3
தொழில்நுட்ப உதவியாளர்-9
புரோகிராமர்-1
விவசாய அமைச்சகம் 2022: தகுதி
ஆலோசகர்: வேளாண்மை/மண் அறிவியல்/ தாவர வளர்ப்பு/ பயிர் மேம்பாடு/ தாவரப் பாதுகாப்பு/ஏதேனும் விவசாயப் பாடத்தில் முதுகலைப் பட்டம்/ அல்லது விவசாயப் பொறியியல் அல்லது வேளாண் அறிவியல் துறைகளில் எம்.டெக். ஆகிய பட்டங்களில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பயிர் உற்பத்தியில் குறைந்தபட்சம் 8 வருட கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இயந்திரமயமாக்கல் அல்லது தேசிய அளவில் தொழில்நுட்ப உதவியாளர்களாக மாநில/மாவட்ட ஆலோசகராக பணிபுரிந்து இருத்தல் வேண்டும்.
புரோகிராமர்: அரசாங்கத்தில் 2 வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனங்களில் இருந்து கணினி பயன்பாட்டில் முதுகலை (MCA) பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர்: வேளாண்மை/ மண் அறிவியல்/ வேளாண்மை விரிவாக்கம்/ தாவர வளர்ப்பு/ அல்லது வயல் பயிர்களை நிர்வகிப்பதில் நிபுணத்துவம் பெற்ற வேறு ஏதேனும் வேளாண்மைப் பாடத்தில் முதுகலைப் பட்டம்
விவசாய அமைச்சகம் 2022: வயது வரம்பு
அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச வயது வரம்பு 01.04.2022 தேதியின்படி 45 ஆகும்.
இந்த வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் 01.04.2022 முதல் 30.09.2022 என்ற காலம் வரை இருக்கும்.
வேளாண் அமைச்சகம் 2022: ஊதியம்
ஆலோசகர்- 68,000
தொழில்நுட்ப உதவியாளர்- 47,500
புரோகிராமர்- 42,500
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தகுதிகளைப் பூர்த்திச் செய்து https://www.nfsm.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். இந்த விண்ணப்பத்தை 30.04.2022க்குள் பூர்த்திச் செய்தல் வேண்டும்.
மேலும் தகவலுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
மேலும் படிக்க
TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!
மாதம் ரூ. 1,82,200 சம்பளத்தில் வேலை: தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்!
Share your comments