பொதுமக்கள் பயன் பெரும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" என்பதினை விரைவில் அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் வசிப்பவர்கள் அதிக பயன் பெறுவார்கள்.
உணவு விநியோக திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியன குறித்து நேற்று விவாதிக்க பட்டது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள மத்திய உணவு கிடங்கு. தேசிய உணவு கிடங்கு மற்றும் தேசிய உணவு கழக கிடங்குகளில் மக்களுக்கு போதிய அளவு உணவு பொருட்கள் தற்போது இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மக்கள் சிரமமின்றி ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் வெகு விரைவில் அறிமுக படுத்த உள்ளது.
உணவு பொருட்கள் விநியோகம் சேவையினை ஆன்லைன் மூலம் செய்யும் வசதிகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பணி நிமித்தமாகவோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ சொந்த ஊரை விட்டு ,வேறு மாவட்டங்களிலோ அல்லது வேறு மாநிலங்களிலோ வசிக்கும் ஊழியர்கள் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரிதும் பயனடைவார்கள் என கூறினார்.
சோதனை முயற்சியாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இத்திட்டம் அமல் படுத்த பட்டுள்ளது. இதன் திட்டத்தின் மூலம் நுகர்வோர்கள் ஒரே கடையை மட்டும் சார்ந்திராமல் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் வகையில், அமைந்துள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments