1. செய்திகள்

மு.க.ஸ்டாலின்: ஜவ்வரிசி உற்பத்தியில் தமிழகத்தை சர்வதேச தரத்தில் உயர்த்தப்படும்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Salem district will be upgraded to international standards in Edible Starch production

ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஸ்ரீ பழனி ஆண்டவர் என்ற ஜவ்வரிசி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுசெய்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான, சேலம் சேகோசர்வ் நிர்வாக கட்டிடத்தில் மின் ஏல மையம் மற்றும் ஜவ்வரிசி நேரடி விற்பனை முனைய கட்டிடம்  ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரையும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்தித்து கலந்து பேசி அதற்கு பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளை கோரிக்கைகளை கேட்டு அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தெறிவித்தார்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு சேமிப்பு கிடங்கு ஜவ்வரிசியை உணவு பொருளாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க குழு அமைக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் ஜவ்வரிசி கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நான்கு மாதத்தில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெற்காசிய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிடும் வகையில் புதிய தொழில்களை ஈர்க்கும் வகையில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 17,149 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 42 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டினை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருப்பூர் மதுரை கோவை உள்ளிட்ட 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும், நகரம் கிராமம் வேறுபாடின்றி தொழில் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.  ஜவ்வரிசி உற்பத்தி பெயர் பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்தில் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.

மேலும் படிக்க:

மு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்

முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு பின்னரே விவசாயம் மற்றும் தங்க நகை கடன்கள் தள்ளுபடி!!!

English Summary: MK Stalin: Salem district will be upgraded to international standards in Edible Starch production Published on: 01 October 2021, 03:27 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.