உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதி வழங்கினார்.
உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
ஆகையால், பிரயாக்ராஜ் நகரில் இன்று மிக பிரம்மாண்டமான மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பெண்களுக்கான புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார். ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் பெண் குழந்தைகள் நலனுக்காக முதல்வர் கன்யா சுமங்களா திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.
மேலும் 202 சத்துணவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் கட்டப்படவுள்ள நிலையில் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்லையும் நாட்டினார். இந்தத் தொழிற்சாலைகள் தலா ரூ.1 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.
மேலும், 16 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவியும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், 20 லட்சம் பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டமும் பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி செய்யும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க:
Share your comments