1. செய்திகள்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- டிடிவி

T. Vigneshwaran
T. Vigneshwaran
Paddy

முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21% வரை உயர்த்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம் 16 % இருக்க வேண்டும் என்று தமிழக அரசு விவசாயிகளை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது.

தற்போது பெய்யும் மழையினால் நெல்லின் ஈரப்பதம் 20 லிருந்து 25 சதவீதம் வரை உள்ளது. இத்தகைய எதிர்பாராத இயற்கை பாதிப்புகளின்போது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 21% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போதும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் திமுக அரசு நடந்துகொள்வது சரியானதல்ல.

எனவே, முதல்வர் இப்பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21 % வரை உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

Diwali Sale: குறைந்த விலையில் ஐபோன் வாங்க வாய்ப்பு

English Summary: Moisture content should be raised for paddy procurement- TTV Published on: 27 September 2022, 07:26 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.