தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாயும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு .3,000 ரூபாயும் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தேர்தல் ஜூரம்
பொதுவாக சட்டமன்றத் தேர்தலோ, அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ நடைபெறும் பட்சத்தில், மக்களின் கவனத்தை தங்கள் வசம் ஈர்த்து, அவர்களது வாக்குகளை வாங்குவதற்கு கட்சிகள் முயற்சி செய்வது வாடிக்கை. அதிலும், ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லது கூட்டணியைவிட, ஆட்சியில் இல்லாதக் கட்சி அல்லது கூட்டணி, சலுகை அறிவிப்புகளை வீசி மக்களுக்கு ஆசை காட்டுவது வழக்கம்
சட்டப்பேரவைத் தேர்தல்
அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரைவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்த்த பல்வேறு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகிறது.
பிஜேபி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட பிறக் கட்சிகளும், வாக்கு சேகரித்து வருகின்றன.
மாதம் ரூ.2,000
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உட்பட பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக, பெலகாவியில் நடைபெற்ற இளைஞர் புரட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவற்றில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாயும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு .3,000 ரூபாயும், டிப்ளமோ பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் முக்கியமானவை.
சலுகைகள்
இதைத்தவிர இலவச மின்சாரம், வீடுகளுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்புகள் மக்களை ஈர்த்திருப்பதுடன், அவர்களிடையே அமோக வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.
மேலும் படிக்க...
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அகவிலைப்படி 6 % உயர்வு- அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!
Share your comments