கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தொற்று நோய் துறையின் ஆராய்ச்சியாளர் ராபின் ஏ ரிச்சர்ட்சன் (Robin A Richardson) தலைமையில் கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமே மழை அதிக அளவு பெய்து வெள்ளமாக மாறுவது தான். வெள்ளத்தில் (Flood) பயிர்கள் மூழ்கியதால், தன் உழைப்பும், நேரமும் வீணாகி தானியங்களும் வீணாவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முற்படுகிறார்கள்.
அதிர்ச்சித் தகவல் (Shocking information)
கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி (IIT) காந்தி நகர் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் (Research) தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புறங்களில் 2001 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில் இறப்புகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமப்புறங்களில் 9,456 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
தற்கொலை விகிதம் (Suicide rate)
பருவ காலங்கள் மற்றும் பயிர் விளைச்சல் ஆகியவற்றின் அடிப்படையில் தற்கொலைகளை ஆய்வு செய்ததில் வறட்சி காலங்களில் தற்கொலைகள் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதும், மழைக் காலங்களில் 18.7 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது அனைவரிடத்திலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து வறட்சியில் கூட ஓரளவு மகசூல் (Yield) கிடைத்து விடுகிறது என்றும், ஆனால் பெருமழையில் பயிர்கள் மூழ்குவதால் மகசூல் குறைந்து விடுகிறது என்றும் மிகத் தெளிவாக புரிகிறது.
வறட்சியும், வெள்ளமும் (Drought and floods)
வறட்சியில் (Drought) கூட பயிர்களுக்கு போர்வெல் மூலம் நிலத்தடி நீர் ஓரளவு கிடைத்துவிடும். ஆனால், போர்வெல் (Borewell) இல்லாது வான்மழையை மட்டுமே நம்பி உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள் மழையில்லாமல் வறட்சியின் போது விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்து விடுகின்றனர்.
வறட்சியை விட, மழையின் தாக்கம் அதிகளவு இருப்பின், வெள்ளத்தில் பயிர்கள் மிதந்தும், சூறாவளிக் காற்றில் பயிர்கள் சாய்ந்தும், மரங்கள் வீழ்ந்தும் விவசாயத்தை அடியோடு சாய்த்து விவசாயிகளை தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தி விடுகிறது.
இந்த கிராமப்புறங்களில் தண்ணீர் கிடைக்கும் தன்மை அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை தற்கொலைகளை தண்ணீர் கிடைக்கும் தன்மை அடிப்படையில் யாரும் ஆய்வு செய்ததில்லை. மேலும் தண்ணீர் இல்லாத வறட்சியான காலங்களைவிட அதிக மழையும் வெள்ளமும் ஏற்பட்ட காலங்களில்தான் அதிகமான தற்கொலைகள் (Sucide) நிகழ்ந்துள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், சூறாவளி, வறட்சி என எது வந்தாலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் சில நல்ல திட்டங்களை (Scheme) அரசு அமல்படுத்தினால் விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டு விவசாயம் காக்கப்படும்.
ரா.வ. பாலகிருஷ்ணன்
Krishi Jagran
மேலும் படிக்க...
Share your comments