தென்மேற்கு பருவக்காற்று (Monsoon2020) மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மழையில் குறித்த விவரங்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாகக் கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்று கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்றும் நாளையும் குஜராத் கடற்பகுதிகளில் பேரலை 4 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
-
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 40டிகிரி செல்சியஸ் முதல், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 7 செ.மீ, மழை பதிவாகி உள்ளது. வால்பாறை 6 செ.மீ, திண்டிவனம் 5 செ.மீ, சின்கோனா 5 செ.மீ, சோலையார் 4செ.மீ, பெரியாறு 3செ.மீ, குடிமியான்மலை 3 செ.மீ, வல்லம் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க....
மானிய விலையில் காய்கறி விதைகள் - தோட்டக்கலை துறை!
கிருஷ்ணகிரியில் கடும் வறட்சி - மாம்பழ உற்பத்தி பாதிப்பு!
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்
Share your comments