நீலகிரியில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களில், 60 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. முதல் போகத்திற்கு கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு அதிகரித்த காரணத்தினால், 60 சதவீதம் அளவுக்கு கேரட். பீட்ரூட் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
தொடர் மழை (Continuous Rain)
ஊட்டி அருகே, எம்.பாலாடா, பர்ன் ஹில், கப்பத்தொரை மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில், 100 ஏக்கர் அளவுக்கு மலை காய்கறிகள் அழுகி பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு தயாரான மலை காய்கறிகளை விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலபேரி கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தந்த பகுதி உதவி இயக்குனர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
மேலும் படிக்க
மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!
Share your comments