திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகின் முன்னணி தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தனது வருங்கால மருமகள் ராதிகாவுடன் இன்று காலை ஏழுமலையான் அபிஷேக சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாமி தரிசனத்திற்கு பிறகு, முகேஷ் அம்பானிக்கு ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதம் மந்திரம் முழங்க ஆசி வழங்கினர். பின்னர் கோயில் நிர்வாகிகள் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து முகேஷ் அம்பானி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு ரூ.1.5 கோடியை கோயிலுக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.
பின்னர்,கோசாலை நிர்வாகத்தை சந்தித்த முகேஷ் அம்பானி, அங்கிருந்த லட்சுமி மற்றும் பத்மாவதி என்ற இரு யானைகளிடம் ஆசி பெற்றார். கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் சிறப்பான வரவேற்பு தந்தனர். திருப்பதி எம்பி விஜயசாய் ரெட்டி, எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி ஆகியோரும் முகேஷ் அம்பானியுடன் உடன் இருந்தனர்.
நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
விவசாயிகளை நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி
சூப்பர் செய்தி: தோட்டக்கலை மானிய திட்டம், விரைவில் விண்ணப்பிக்கலாம்
Share your comments