தேசிய நெல் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக திருத்துறை பூண்டியில் நெல் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் இயற்கை விவசாயிகள், பாரம்பரிய விதை மீட்பாளர்கள் இயற்கை மருத்துவர்கள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், நீரியில் வல்லுனர்கள், நுகர்வோர் இயக்க பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒரே இடத்தில சங்கமித்து மேலும் சிறப்பு செய்தார்கள்.
நம்மாழ்வார் அவர்களால் பனிரெண்டு ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டு, பின்பு நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அவ்விருவரின் மறைவிற்கு பின்பும் நெல் திருவிழாவை திறம்பாடு நடத்தி அவர்களின் கனவை நினைவாக்கி வருகிறார்கள் கிரியேட் என்ற அமைப்பு.
தமிழகத்தில் இயற்கை விவசாயம் பரவ மிகபெரிய காரணியாகவும், 170 க்கு மேற்பட்ட மேற்பட்ட பாரம்பரிய நெல்லை வகைகளை மீட்டேடுத்த பெருமை இவர்களையே சேரும். 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் விவாசகிகளும், இயற்கை ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் கலந்து கொள்ளும் புதிய விவசாகிகளுக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் கொடுக்க படும். அவர்கள் அதனை இயற்கையான முறையில் விளைவித்து அடுத்த வருட நெல் திருவிழாவில் நான்கு கிலோவாக தர வேண்டும். மீண்டும் இந்த நெல் விழாவில் கலந்து கொள்ளும் புதிய விவசாகிகளுக்கு விநியோகிக்க படும்.
விழாவின் முக்கியம்சங்கள்
- பாரம்பரிய நெல் ராகங்களின் கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் உணவுத்திருவிழா.
- பங்கேற்கும் விவசாகிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய விதை நெல்லை இலவசமா வழங்க பட்டது.
- சிறப்பாக செயல் படும் விவசாகிகளுக்கும், இயற்கை விவசாயத்தை நாடுவோர்க்கும் சரியான அங்கிகாரம் வழங்க வேண்டும் என்ற வகையில் பத்து நபர்களுக்கு நம்மாழ்வார் விருதும் . மேலும் பத்து நபர்களுக்கு நெல் ஜெயராமன் விருதும் வழங்கப்பட்டது.
- கருத்தரங்குகள் நடை பெற்றன.அதில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன . குறிப்பாக பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப பாரம்பரிய நெல்வகைகளை வளர்ப்பது, நெல் வகைகளை தாக்கும் பூச்சி, கையாளும் வழிகள் ஆகியன குறித்து பேச பட்டன.
- வேளாண் மற்றும் வேளாண் பொருட்களை சந்தை படுத்துதல், மதிப்பு கூட்டுதல், அரசு சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள், நுகோர்ப்பார்வை, விதை நிறுவங்களின் காப்புரிமை , விதை சேமிப்பு என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்க பட்டன.
- நோயற்ற வாழ்கைக்கு மக்களை இட்டு செல்லும் வகையில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் தலைமையில் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தனர்.
- விவசாகிகள் மட்டுமல்லாது,சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நெல் ஜெயராமன் குறித்து பாட திட்டத்தில் சேர்த்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தமிழக அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். புதிய ரக நெல்லுக்கு ஜெயராமன் பெயரை சூட்ட வேண்டும். மற்றொன்று நெல் ஜெயராமன் பெயரில் ஆராய்சசி நிறுவனம் ஒன்று அமைக்க பட வேண்டும் என்பன போன்றவையாகும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments