தேசிய பென்சன் திட்டம் (National Pension System) மற்றும் அடல் பென்சன் திட்டம் (Atal Pension Yojana) ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA. இதன்படி தேசிய பென்சன் திட்டத்தின் பயனாளிகளுக்கு NPS Prosperity Planner (NPP) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தேசிய பென்சன் திட்ட பயனாளிகள் தங்களுக்கான எதிர்கால திட்டமிடுதலை செய்துகொள்ளலாம்.
மூன்று வசதிகள் (3 Benefits)
NPP வசதியில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. பயனாளிக்கு எவ்வளவு பென்சன் கிடைக்கும்? எவ்வளவு பென்சன் தேவைப்படும்? அந்த பென்சன் தொகையை எட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரிந்துகொள்வது பெரிதும் உதவுகிறது NPP. சிக்கிம் மற்றும் ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் பான் கார்டு விவரத்தை வழங்க தேவையில்லை.
அரசு ஊழியர்கள் பணி ஓய்வு தேதிக்கு பின் மரணிக்கும்போது, வாரிசு அல்லது நாமினிக்கு மொத்த தொகையில் 60% கிடைக்கும். 40% நிதியை ஆண்டுத்தொகையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
சுய அறிவிக்கை (self declaration)
பென்சன் நிதியில் உள்ள பணத்தை பாதியாகவோ, நிபந்தனை அடிப்படையிலோ எடுப்பதற்கு கோரிக்கை விடுத்தால், அந்த கோரிக்கை ஒரே நாளில் செயல்படுத்தப்படும். பாதியாக பணத்தை எடுத்துக்கொள்ள நோடல் அதிகாரிகளிடம் சுய அறிவிக்கை (self declaration) சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய பென்சன் திட்டத்தில் உங்கள் பங்களிப்பையும், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் (அரசு ஊழியர்களுக்கு அரசு) பங்களிப்பையும் பார்ப்பதற்கு தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?
திருப்பதி லட்டு இனி பனை ஓலைப் பெட்டியில் விநியோகம்: தேவஸ்தானம் அறிவிப்பு!
Share your comments