அதிமுக தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500/- உழவு மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைத்தல், அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. அரசியல் பரபரப்பு (Political turmoil)
அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணத் திட்டம், அனல்பறக்கும் பிரசாரம், அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள், என தமிழக அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் பம்பரம்போலப் பணியாற்றி வருகின்றனர். முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுப்பட்டுவிட்டன.
மகிழ்ச்சியும், வருத்தமும் (Happiness and Sadness)
போட்டியிட சீட் கிடைத்தவர்கள் மகிழ்ச்சிக்காக தங்கள் வெற்றிக்காகப் பாடுபடத்தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் சீட் கிடைக்காதவர்கள் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தவும் தவறவில்லை. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் அறிக்கை (Manifesto)
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல் இதோ!
தேர்தல் வாக்குறுதிகள் (Election promises:)
-
குடும்பத் தலைவிகளுக்கு குல விளக்கு திட்டத்தின்கீழ் ரூ.1500, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்
-
அம்மா இல்லம் என்ற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்.
-
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா
வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி
-
அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்
-
விலையில்லா கேபிள் டிவி இணைப்பு
-
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
-
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
-
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை
-
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை
-
மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை பின்பற்றப்படும்
-
மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்
-
கல்விக்கடன் ரத்து செய்யப்படும்
-
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்
-
பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும்
-
அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 லட்சமாக உயர்த்தப்படும்
-
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
-
9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்
-
மதுரை விமான நிலையத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை
-
நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை
-
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தெகை இரட்டிப்பாக்கப்படும்
-
அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்
-
கரிசல், களிமண் எடுக்க தடையில்லா சான்று அளிக்கப்படும்
-
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
-
பத்திரிகையாளர்களுக்குக் குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்
-
25,000 ரூபாய் மானியத்தில் எம்ஜிஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும்
-
பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.
-
மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க்.
இவை அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில அம்சங்கள்.
மேலும் படிக்க...
முதல் நாளே போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!
Share your comments