Krishi Jagran Tamil
Menu Close Menu

அமெரிக்கன் புழுக்களை அழிக்க `ரெடுவிட்’ பூச்சிகள்

Friday, 07 December 2018 01:31 PM

மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்கும் `ரெடுவிட்' (Reduvid) பூச்சிகள் விருதுநகரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 6 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் ஆகும். இந்த ஆண்டு மக்காச் சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்குதல் காணப்படுகிறது.

பூச்சி மருந்துகளுக்கு இந்தப் புழுக்கள் கட்டுப்படுவதில்லை. இதனால், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாரம்பரிய ரகங்கள் தவிர, மற்ற அனைத்து மக்காச்சோளப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இப்படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தி அழிக்கும் `ரெடுவிட்' பூச்சிகள் விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கிராமத்தில் விருதை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் பூச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது பச்சை நிறப் பயிர்களைத் தாக்கி அழிக்கும் புழுக்களை (Catter piller) கொல்வதற்காக `ரெடுவிட்' என்ற பூச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரம் பூச்சிகள் வெளியிட தயாராக உள்ளன. இப்பூச்சி கத்தரிக்காய் காய்ப்புழு, வெண்டைக்காய் காய் புழு, தக்காளி காய்புழு, மக்காச்சோள படைப்புழு போன்ற அனைத்து வகையான புழுக்களையும் தாக்கி அழித்து உண்ணக் கூடியது.

இப்பூச்சி ஹைதராபாத்தில் உள்ள தேசிய பயிர் ஊட்ட மேலாண்மை மையத்திலிருந்து (என்.ஐ.பி.எச்.எம்.) பெறப்பட்டு தமிழகத்தில் முதன்முறையாகவும், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. படைப்புழுக்கள் தாக்குதலுக்கு ஆளான பயிரில் ஓர் ஏக்கருக்கு 10 ஜோடி `ரெடுவிட்' பூச்சிகள் போதுமானது. இவை 45-வது நாளிலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை 45 முதல் 50 முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்கும். அவை மீண்டும் அடுத்த 45 நாட்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொறிக்கும். பச்சையத்தைத் தின்று வாழும் அனைத்து வகைப் புழுக்களையும் `ரெடுவிட்' பூச்சிகள் முற்றிலுமாக அழித்துவிடும்.

Reduvid - to control Fall armyworm
English Summary: Natural enemies to control Fall Army worm

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!
  2. மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
  3. இந்த மாநில விவசாயிகள் கொடுத்துவைத்தவர்கள்! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.10,000 பணம்!
  4. 10 கோடி விவசாய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது! - பிரதமர் மோடி!
  5. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்- தமிழகத்தில் அக். 1ம் தேதி முதல் அமல்!
  6. உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழு கூட்டத்தில் முறையீடு!
  7. வயலில் பதுங்கியிருக்கும் எலிகள்-கட்டுப்படுத்தக் கச்சிதமான வழிகள்!
  8. PM Kisan FPO : விவசாய அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன்!
  9. 100% மானியத்தில் அசில் ரக கோழிகள் -விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கெடு!
  10. அக்டோபர் 5ம் தேதி ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி! TNAU ஏற்பாடு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.