SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக்கால சலுகைகளை அறிவித்துள்ளது. சுமார் 2000 நகரங்களில் மொபைல், நகைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என வாங்கும் போது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தினால் கேஷ்பேக் மற்றும் அதிரடி தள்ளுபடிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என தொடர்ந்து வரும் பண்டிகைக் காலத்தை கொண்டாட நாட்டு மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த கொரோனா ஊரடங்களு தளர்த்தப்பட்டு வருவதைத் தொடந்து மக்கள் மெல்ல மெல்ல சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே மக்களை மகிழ்விக்க எஸ்.பி.ஐ வங்கியும் பண்டிகைக்கால சலுகைகளை அதிரடியாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஃபேஷன் பொருட்கள், நகைகள், மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும் போது கேஷ்பேக் ஃஆபர் (Cash back offer) மற்றும் அதிரடி தள்ளுபடிகளை (Discounts) பெறலாம். சுமார் 2000 நகரங்களில் 1000க்கும் மேற்பட்ட சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ பண்டிகைக்கால தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள்
அக்டோபர் 1 முதல் தொடங்கிய இந்த பண்டிகைக்கால சலுகைகள் வரும் நவம்பர் 15 வரை தொடரும் எனவும், பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எஸ்பிஐ கார்டு பிரிவின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வினி குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு 1,000 க்கும் மேற்பட்ட சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம். தேசிய மற்றும் உள்ளூர் வணிகர்களுடன், எஸ்பிஐ அட்டைதாரர்களுக்கு அனைத்து வகைகளிலும் பெரும் நன்மைகளை வழங்க சுமார் 2,000 நகரங்களில் உள்ள பெரிய பெரிய மால்கள், ஆன்லைனில். ஷாப்பிங்களிலும் அதிரடி தள்ளுபடிகள் வழங்கியுள்ளோம் என்றார்.
மேலும் இந்த கொரோனா பயத்தை மறந்து மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடும் வகையில் எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள், 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஈஎம்ஐ வசதியுடனும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன்றவற்றை சுலப தவணை திட்டத்திலும் வாங்கலாம். பெரிய பெரிய நகரங்களைப் போன்று, சிறிய நகரங்களிலும் ஹைப்பல் லோக்கல் சலுகைகளையும் எஸ்பிஐ கார்டு உருவாக்கியுள்ளது.
உதாரணமாக, இந்த பண்டிகைக் காலத்தில் எஸ்பிஐ வங்கி பிராண்டட் நிறுவனங்களுடன் சேர்ந்து, 1100க்கும் அதிகமான கடைகளில் சலுகைகளை வழங்குகிறது. மேலும், 46 சிறு நகரங்களில் 10% முதல் 55% வரையிலான அதிரடி தள்ளுபடியுடன் 700க்கும் மேற்பட்ட ஹைப்பர் லோக்கல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் ஷாப்பிங் இடங்கள்
இந்த பண்டிக்கால சலுகைகள் ஃபேஷன் & லைஃப்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் மற்றும் நகைகள் ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது. இவைகள், அமேசான்(Amazon), குரோமா (Croma), ஃபர்ஸ்ட் க்ரை (First Cry), க்ரோஃபர்ஸ் (Grofers), ஹோம் சென்ட்ரே(HomeCenter), மோர் ஹைப்பர் மார்க்கெட் (More Hypermarket), பாண்டலூன்ஸ் (Pantaloons), சாம்சங் மொபைல் (Samsung Mobile) மற்றும் டாடா க்ளிக் (Tata CliQ) போன்றவற்றின் மூலம் பெறலாம்.
ஃபிளிப்கார்ட் - பிக் பில்லியன் டே
மேலும் கூடுதலாக, எஸ்பிஐ கார்டு பிளிப்கார்ட்டின் தி பிக் பில்லியன் டே சேல்ஸ் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். பிளிப்கார்ட்டில், வாடிக்கையாளர்கள் இந்த பண்டிகைக் காலத்தில் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம், மேலும் ஏராளமான டீல்களும், அதிரடி தள்ளுபடிகளும் உள்ளன.
மேலும் பிடிக்க...
இனி OTP இல்லாமல் LPG சிலிண்டர் கிடையாது - நவம்பர்-1லிருந்து விநியோக முறையில் மாற்றம்!!
எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!
விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...
Share your comments