1. செய்திகள்

நீட் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றேக் கடைசிநாள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Neet Exam: Today is the last day to apply online!

2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

மருத்துவர் ஆசை (Doctor desire)

நான் பெரியவளானதும் டாக்டராகி உங்களுக்கு ஊசி போடுவேன் என்பதுதான் நம்மில் பலரது சிறுவயது ஆசையாக இருக்கும்.

அதேநேரத்தில் கடினமான உழைத்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள், தாங்கள் ஆசைப்பட்டபடியே மருத்துவராகி இந்த சமூகத்திற்கு சேவை ஆற்றியிருக்கிறார்கள்.

நீட் தேர்வு (Need to choose)

அப்படிப்பட்ட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தற்போது ‘நீட்' என்ற நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடினமானத் தேர்வு (Tough choice)

இந்தத் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுவதால், மாநில அரசின் சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் இந்தத் தேர்வில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. நீட் தேர்வு இந்த மாணவர்களுக்கு கடினமானதாக உள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு (Postponement of examination)

அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் ‘நீட்’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தாமதமாகத் தேர்வு (Late selection)

பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

மாணவர் சேர்க்கை (Student Admission)

தேர்வுத் தாமதமாக நடத்தப்பட்டதால், கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் சற்று தாமதமானது.

இந்த நிலையில் , கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் விண்ணப்பம் (Apply online)

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கியது. https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன்(10.8.2021) முடிவடைகிறது.

திருத்தம் செய்ய

அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நகரங்கள் அதிகரிப்பு (Increase in cities)

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் இன்று மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு!

தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

English Summary: Neet Exam: Today is the last day to apply online! Published on: 09 August 2021, 08:53 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.