தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய செயலி "ள்ஹச்ற்ண்ங்'- யை உருவாக்கி உள்ளனர். இதில், நமது ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா எச்சரிக்கையாகச் செயல்படுகிறது. அபாயகரமான இடங்களில் நின்று நாம் செல்ஃபி எடுத்தால், அந்த இடத்தின் அபாயகரமான தன்மையை இந்த செயலி எச்சரிக்கும்.
உதாரணமாக, ரயில் தண்டவாளம், நீர்நிலைகள், உச்சி மலை, பெரிய விலங்குகள் போன்றவற்றுடன் நாம் செல்ஃபி எடுக்க முயன்றால், "நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இல்லை' என்று இந்த செயலி எச்சரிக்கும்.

உலகம் முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் இந்த ஆப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான இடங்களை நிர்ணயிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஓராண்டுக்கு முன்பே "லோகேஷன் மார்க்கர்' எனும் ஆப்பை வெளியிட்டு, பொது மக்களின் தகவல்களைப் பெற்றுள்ளனர். ஒரே இடத்தை குறிப்பிட்டு அபாயகரமான பகுதி என மூன்றுக்கும் மேற்பட்டோர் பதிவிட்டால் அதை அபாயகரமான பகுதியாக நிர்ணயித்துள்ளனர். இதுபோன்று சுமார் 6000 இடங்கள் அபாயகரமான பகுதிகளாக இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஸ்மார்ட் போனில் டேட்டா (இண்டர்நெட்) ஆப் செய்யப்பட்டிருந்தாலும் இந்த செயலி செயல்படும். எவ்வளவு உயரத்தில் நாம் நிற்கிறோம். நமக்கு பின்னால் என்ன பொருள் உள்ளது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்த ஆப் எச்சரிக்கும்'
Share your comments