தமிழகத்தில் புதிய மின் இணைப்பிற்காக விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய மின் இணைப்பு (New EB Connection)
தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் மின் விநியோக விதிகளில் அவ்வப்போது பல பல புதிய திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது. அதாவது, தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளாகவே புதிய மின் இணைப்பு கண்டிப்பாக வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு கொடுக்காத நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, விண்ணப்பதாரர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளாக மின் இணைப்பு வழங்காத பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பழுதடைந்த மீட்டர்களை 7 நாட்களுக்குள்ளாக மாற்றாத நுகர்வோர்களுக்கு ஒரு நாளைக்கு மட்டுமே ரூபாய் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோருக்கு கட்டாயமாக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு இருப்பின் நுகர்வோருக்கு ரூபாய் 50 அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
PF Rules: திருமணத்திற்கு பிஎப் தொகையை எடுக்க நினைத்தால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
இரண்டாகப் பிரியும் TNPSC தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசின் திடீர் முடிவு!
Share your comments