1. செய்திகள்

இரயிலில் வரப்போகும் புதிய வசதி: இனி திருட்டுப் பிரச்சனையே இருக்காது!

R. Balakrishnan
R. Balakrishnan
Digital Locking System

ரயில்களில் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்க இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பார்சல் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. இதில் பார்சல் பெட்டியின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி விடுகின்றனர். 2019ஆம் ஆண்டு, ஜார்கண்ட் மாநிலம் ஹதியாவில், பார்சல் பெட்டியின் பூட்டிய பகுதியை கட்டர் மூலம் அறுத்து 30 லட்சத்திற்கும் அதிகமான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் (Digital Locking System)

ரயில்களில் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில், ரயில்களில் திருட்டு சம்பவங்களைத் தடுக்க OTP அடிப்படையிலான டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டத்தை (OTP based Digital Locking System) இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மொபைல் ஆப் அடிப்படையிலான டிஜிட்டல் ஸ்மார்ட் லாக்கிங் சிஸ்டம் பயணிகளின் லக்கேஜ் மற்றும் பார்சல்கள் திருடப்படுவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

செயல்படும் விதம்

டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் என்பது OTP அடிப்படையிலான பூட்டுதல் அமைப்பாகும். இந்த ஸ்மார்ட் லாக்கிங் சிஸ்டம் ஜியோ மேப்பிங்கை அடிப்படையாகக் கொண்டது. இதன் காரணமாக இடம் மற்றும் தகவல் சேதப்படுத்தப்பட்டால் உடனடியாக தெரிந்துவிடும். பயணிகளின் லக்கேஜ் வைக்கப்பட்டது முதல் லக்கேஜ்களை திரும்ப எடுத்துச் செல்லும் நிலையம் வரை அந்த நிலையத்தின் குறியீடு மற்றும் OTP ஆகியவை நிர்ணயிக்கப்படும். அதே அடிப்படையில், அந்த நிலையத்தில் பொருட்களை வெளியே எடுக்க முடியும். அதற்கு OTP வழங்கப்படும்.

ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, புவி மேப்பிங் அடிப்படையிலான ஸ்மார்ட் லாக் காரணமாக, அதை எங்காவது உடைக்க முயற்சித்தாலோ அல்லது பார்சல் கோச்சில் இருந்து கட்டர் மூலம் வெட்டப்பட்டாலோ அதன் இருப்பிடம் மற்றும் தகவல் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு சென்றடையும்.

சோதனை

இந்திய ரயில்வே தற்போது இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் லாக்கிங் முறையை சோதனை செய்து வருகிறது. ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மொபைல் ஆப் அடிப்படையிலான லாக்கிங் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பானது. இது டிஜிட்டல் லாக்கிங் அமைப்பாகும். இதன் மூலம் மதிப்புமிக்க பார்சல்கள் மற்றும் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்.

ரயில்களில் பார்சல் பெட்டி மூலம் செல்லும் சரக்குகளை திருட்டு கும்பல்கள் கண்காணிக்கின்றன. இந்த கும்பல்கள் இரவில் ஓடும் நீண்ட தூர ரயில்களை குறிவைக்கின்றன. ஆனால் ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, செயலி அடிப்படையிலான டிஜிட்டல் ஸ்மார்ட் லாக்கிங் அமைப்பு அவர்களைத் தடுத்து நிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

முதியோர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வேண்டும்: செவி சாய்க்குமா தமிழக அரசு?

பணத்தை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக!

English Summary: New facility to come in train: No more problem of theft! Published on: 25 February 2023, 01:58 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.