இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றுவது தொடர்பாக இந்திய தனித்துவ ஆதார் அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் அப்டேட்ஸ் (Aadhar Updates)
இந்தியாவில் இன்றைக்கு ஆதார் மிக முக்கியமான ஆவணங்கள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் அதில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய ஆதார் ஆணையம் (UIDAI) அறிவுறுத்தி வருகிறது.
ஏதேனும் விவரங்கள் மாற்றம் இருப்பின் ஆன்லைன் வாயிலாகவும் அரசின் இ- சேவை மையம் வாயிலாக உடனுக்குடன் அதனை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. விவரங்களை மாற்ற கட்டாயம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் தேவை. இது இருந்தால் நீங்களாவே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே அப்டேட் செய்யலாம்.
முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் UIDAI புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனை மாற்ற அரசு ஆதார் சேவை மையத்தில் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்: ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு!
Post Office: மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேமிப்பு திட்டம் இதுதான்!
Share your comments