தேசிய பென்சன் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கென 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். அதனை தொடர்ந்து இத்திட்டம் 2009ஆம் ஆண்டில் அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களாக இருந்தாலும், வேறு எந்த தனியார் நிறுவனமாக இருந்தாலும், இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் சேமித்து வைக்கும் பணத்தை எடுக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன.
- ஓய்வு பெறும் நேரம்
- முதலீட்டாளர் இறந்தப் பிறகு
- முதிர்வுக்கு முன் பணம் தேவை இருந்தால்
மேலே கூறப்பட்ட மூன்று காரணங்களுக்காக மட்டுமே பணத்தை பெற்று கொள்ள முடியும். கொரோனா பிரச்சினை வந்த பிறகு திடீர் நிதி நெருக்கடி ஏற்பட்டு, இத்திட்டத்தில் வேறு சில சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின் படி, தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்க முடியும். ஆனால் தற்போது 3 வருடங்கள் கழித்து பணத்தை எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- தேசிய பென்சன் திட்டத்தில் 3 ஆண்டுகளில் பணம் எடுக்கலாம்.
- முதலீட்டாளர்கள் தங்களது பங்களிப்பில் 25 சதவீதத்தை மட்டுமே எடுக்க முடியும்.
- மருத்துவச் சிகிச்சை, திருமணம், குழந்தைகளுக்கான உயர் கல்வி போன்ற சிலக் காரணங்களுக்காக சிறிதளவு பணத்தை எடுக்கலாம்.
- பகுதி அளவு பணத்தை 3 முறை மட்டுமே எடுக்கலாம். அவ்வாறு எடுக்கும்போது இடையில் 5 ஆண்டுகள் இடைவெளி இருத்தல் வேண்டும்.
தேசிய பென்சன் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c-யின் கீழ் ரூ. 1.50 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
PF பயனாளிகளுக்கு முக்கியமான செய்தி.. உங்கள் பணத்துக்கு பெரிய ஆபத்து!
Share your comments