ஐந்து கோடி சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில், உதவித் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 50 சதவீதம் சிறுபான்மையின மாணவியருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை தேவையான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி படுத்த வேண்டும். மதவாதத்தை அகற்றி, அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க படும் என்று கூறினார்.
குடும்பம் மற்றும் பொருளாதார காரணங்களால கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையினர் மாணவர்களுக்கு மீண்டும் கல்வியினை தொடர புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக மீண்டும் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறும் வகையில் தேவையான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி அரசு தேர்வுகளான வங்கி சேவை, எஸ்எஸ்சி தேர்வு, ரயில்வே தேர்வு, மத்திய மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
“பேகம் ஹஸ்ரத் மஹால்” என்னும் உதவித்தொகை சிறுபான்மையின மாணவிகளுக்கு அரசால் வழங்க பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவிகளுக்கு இதன் மூலம் படிப்படியாக செலுத்த படும். மதரசா எனும் அமைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பட உள்ளது. இதன் மூலம் இங்கு பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.மேலும் மதரசா பாட திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments