1. செய்திகள்

எல்பிஜி சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தத்திட்டம்-இல்லத்தரசிகளுக்கு இடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
News to raise the price of LPG cylinder again!

எல்பிஜி சிலிண்டரின் (LPG Price Hike) விலையை உயர்த்த கச்சா எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதால், அடுத்த வாரம் அதிகரிக்கூடும் தகவல் வெளியாகி உள்ளது.

விலைஉயர்வு (increase in price)

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது சமையல் சிலிண்டர் விலையும் உயரும் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.


அரசின் அனுமதி அவசியம் (Government permission is required)

பெட்ரோல், டீசல் விலையைத் (Petrol-Diesel Price) தினமும் உயர்த்தி வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சமையல் சிலிண்டர் விலையை அரசின் ஒப்புதலுக்குப் பின்பு தான் உயர்த்த வேண்டும்.

இதன் அடிப்படையில் சர்வதேச விலைக்கு நிகராக எரிவாயு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது எரிவாயு நிறுவனங்கள் உள்ளன.
எல்பிஜியை, விலை குறைவாக விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்பு, ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அதன் விலையை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக விலை உயர்வு (Continually rising prices)

எல்பிஜி (LPG) சிலிண்டரின் விலை எவ்வளவு உயரும் என்பது அரசின் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் (LPG Cylinder) விலை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. ஜூலை மாதம் முதல் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை கிட்டதட்ட 90 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையே சவூதி அரேபியாவில் எல்பிஜி விலை இந்த மாதம் மட்டும் சுமார் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு டன் எல்பிஜி வாயு விலை 800 டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு ஏதுவாக புதிய மானிய திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்காததால், விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயம் உருவாகியுள்ளது.

தற்போது டெல்லி மற்றும் மும்பையில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.899.50 ஆக உள்ளது. அதே சமயம் கொல்கத்தாவில் 926 ரூபாயாக உள்ளது. அதேசமயம் சென்னையில் 915.5 ரூபாயாக உள்ளது.

தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மோடி அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே ஆயிரம் டாலர் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க...

மத்திய அரசு திட்டம்: இனி ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை

Ujjawala Yojana: இலவச LPG சிலிண்டர் பெறுவது எப்படி?

English Summary: News to raise the price of LPG cylinder again!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.