அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai Weather)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையம் (விருதுநகர் ) 8 செ.மீ,, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் ), உத்தமபாளையம் (தேனி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 4 செ.மீ,, வீரபாண்டி (தேனி), கோவிலான்குளம் (விருதுநகர்), பிளவக்கல் ( விருதுநகர்), மேல் பவானி (நீலகிரி) தலா3 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க...
லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு
தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
Share your comments