கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதியக் கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
பாதிப்பு தீவிரம் (The severity of the damage)
தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா 2வது அலைத் தீவிரம் அடைந்துவருவதால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்துக் கொரோனாப் பரவலைத் தடுக்கும் வகையில், ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாவது:
-
இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
பொதுத் தேர்வு ஒத்திவைப்பு (Postponement of Public examination)
மே மாதம் நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
பிறக் கட்டுப்பாடுகள் (Other instructions)
ஓட்டல்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.
ஸ்விகி சூமேட்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உணவு விநியோகம் செய்யலாம்.
சினிமாத் தியேட்டர்கள் (Theaters)
திரையரங்கங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
இரவு போக்குவரத்து (Night transport)
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே இரவில் அரசு, தனியார் போக்குவரத்து அனுமதி கிடையாது.
50% பணியாளர்கள் (50% Staffs)
ஐ.டி. பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படும்.
ஆன்லைன் வகுப்புகள் (Online Classes)
கல்லூரி மாணவர்களுக்குப் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி
உணவகங்கள் (Hotels)
-
முழு நேர ஊரடங்கின் போது உணவகங்கள் காலை 6 மணி முதல் 10மணிவரையிலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் இயங்கலாம்.
-
முழு ஊரடங்கின் போது மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் பார்சல் சேவையில் ஈடுபடலாம்.
மின் வணிக சேவை நிறுவனங்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் அனுமதிகிடையாது.
விளைபொருட்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அதன் சார்ந்த வாகனங்கள் முழு நேரமும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஷாப்பிங்மால்கள் (Shopping Malls)
ஷாப்பிங்மால்கள், ஜவுளிக்கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழாக்களுக்குத் தடை(No Permission)
-
மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
-
ஏற்கனவே அனுமதி வாங்கியுள்ள கோவில் கும்பாபிஷேக விழாக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
-
ஏற்கனவே கும்பாபிஷேகம் நடத்த அனுமதி பெற்றுள்ளவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதுடன், கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்
டாஸ்மாக் கட்டுப்பாடு
-
வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரையில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்க வேண்டும் .
-
முழு ஊரடங்கான ஞாயிற்றுகிழமையன்று டாஸ்மாக் கடைகள் முழுமையாக இயங்காது
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே 2ம் தேதி (May 2nd)
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற உள்ள மே 2ம் தேதி அன்று, ஊரடங்கு விதிகள் அமலில் இருக்காது என மாநிலத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 22ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments