நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக் கலைத் துறை தெரிவித்துள்ளது.
காய்கறி பயிர்களுக்கு மானியம்
இது குறித்து கூடலூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சி இயக்கத் திட்டத்தின்கீழ் காய்கறிப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. காய்கறிகள் பயிரிட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மானிய காய்கறிகள்
குறைந்த அளவே இலக்கு மீதமுள்ளதால் பாகற்காய், சௌ-சௌ, பீன்ஸ், பூசணிக்காய், புடலங்காய், முள்ளங்கி, மிளகாய், பயறு வகைகள், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலரையோ, கூடலூரிலுள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ அணுகலாம்.
தொடர்பு எண்கள்
மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலா் சேரம்பாடி 6380446402, உதவி தோட்டக்கலை அலுவலா் செறுமுள்ளி-9688319370, உதவி தோட்டக்கலை அலுவலா் பந்தலூா்-9385661439, உதவி தோட்டக்கலை அலுவலா் கூடலூா்-9943166175, தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் கூடலூா்-04262-261376 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்
மேலும் படிக்க...
அடர்வனம் அமைக்கும் திட்டம் - இணைய அழைப்பு!
Share your comments