1. செய்திகள்

முதல் முறையாக நீர்பாசன சாகுபடி 52 சதவீதமாக உயர்வு- நிதி ஆயோக் தகவல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
niti aayog report- agri irrigation coverage rise 52 percent in india

2022-23 ஆம் ஆண்டிற்கான அரசாங்க புள்ளி விவரங்களின்படி, முதன் முறையாக நாட்டின் 50%-க்கும் அதிகமான சாகுபடிப் பரப்பு நிலங்கள் பாதுகாப்பான நீர்ப்பாசன வசதியை பெற்றுள்ளது.

நிதி ஆயோக் வழங்கிய சமீபத்திய தரவுகளின்படி, 2022-23 காலகட்டத்தில் இந்தியாவில் நீர்ப்பாசனம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த விதைக்கப்பட்ட 141 மில்லியன் ஹெக்டேரில், தோராயமாக 73 மில்லியன் ஹெக்டேர் அல்லது 52% சாகுபடி நிலங்கள் நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றிருந்தது. இது 2016 இல் பதிவு செய்யப்பட்ட 41% அளவினை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகிறது.

குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற வறண்ட விவசாயப் பகுதிகளில் நீர்ப்பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். நீர்ப்பாசன பரப்பை விரிவுப்படுத்துவதன் மூலம் வறண்ட கோடைகாலங்கள் மற்றும் கணிக்க முடியாத பருவமழையினால் அதிகரித்து வரும் தாக்கங்களை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMKSY-AIBP திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் 21 முன்னுரிமை நீர்ப்பாசனத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 17 வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மாநிலத்தின் ஒட்டுமொத்த நீர்ப்பாசனப் பரப்பில் 16% குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

நாட்டின் மொத்த நீர் நுகர்வில், விவசாய நடவடிக்கைகள் தோராயமாக 80% ஆகும், இது ஆண்டுக்கு 700 பில்லியன் கன மீட்டர் ஆகும். குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் காரீஃப் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களின் தேவைக்கு நீர்ப்பாசனம் செய்வது இன்றியமையாதது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் நிலைக்கு ஒருங்கிணைந்த விவசாயத் துறையின் வளர்ச்சி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. போதிய பருவமழையின்மை விவசாய வருமானத்தை பாதிக்கிறது. ஏனெனில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புறங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் நிகழ்வு ஒழுங்கற்ற மழையின் தீவிரத்துக்கு காரணமாக விளங்குகின்றன. 2018-19 ஆம் நிதியாண்டில், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) மற்றும் அரசாங்கத்தின் கூட்டாண்மை மூலம் நுண்ணீர் பாசன நிதி (எம்ஐஎஃப்) நிறுவப்பட்டது. நுண்ணீர் பாசன முயற்சிகளுக்கான ஆதாரங்களை திரட்டுவதில் மாநிலங்களுக்கு உதவுவதற்காக 5,000 கோடி ரூபாய் நிதியுடன் MIF உருவாக்கப்பட்டது.

ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆவணத்தின்படி, நாட்டில் உள்ள விளை நிலங்களில் சுமார் 60% நீர்ப்பாசன வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், நீரியல் மற்றும் புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக சில பகுதிகளில் நீர்ப்பாசன வலையமைப்புகளை நிறுவுவது சாத்தியமில்லை என்பதால், சுமார் 40% சாகுபடி பரப்பு தொடர்ந்து மழையை நம்பியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் காண்க:

PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!

English Summary: niti aayog report- agri irrigation coverage rise 52 percent in india Published on: 30 May 2023, 02:18 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.