கொரோனா நோய்த் தொற்றை அடிப்படையாகக் கொண்டு, வங்கிக் கடன் (Bank Loan) வாங்கியோர்க்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா (Corona) அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கை (Lockdown) அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத்தவணையை (EMI) திருப்பி செலுத்துவதற்கு, கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை 6 மாதம் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இருப்பினும் இந்த காலக்கட்டதில் மாதத்தவணை செலுத்ததாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. இதனால் சலுகையை பயன்படுத்தியவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினார்கள். இதையடுத்து மாத தவணை தள்ளிவைப்பு சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி (Reserve Bank) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
மக்களின் நிலை:
மக்கள் மற்றும் ஒரு சாதாரண மனிதனின் அவலநிலை என்பது உங்களுக்கு புரியவில்லையா? கொஞ்சம் அதனை நினைத்துப் பாருங்கள். இனி வரும் காலங்களில் தீபாவளி பண்டிகை உட்பட அனைத்து விழாக்காலங்களும் வரவுள்ளது. இதில் நாட்டின் ஒரு சாதாரண குடிமகனின் மகிழ்ச்சி என்பது நீங்கள் மேற்கண்ட திட்டத்தை விரைவில் நடைமுறைப் படுத்துவதில் தான் உள்ளது என மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
வட்டிக்கு வட்டி இல்லை:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சகம் (Federal Ministry of Finance) தரப்பில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட வகைகளுக்கு கடன் வாங்குபவர் இ.எம்.ஐ தடைக்காலத்தைப் பயன்படுத்தினாரா என்பதைப் பொருட்படுத்தாமல் 2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் வாங்கிய சிறு குறு, கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் பொருட்கள், வாகன கடன்கள், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் என அனைத்து நிலுவைகளுக்கும் இந்த வட்டி தள்ளுபடி என்பது பொருந்தும். இது கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான கடன்களுக்கு மட்டுமே ஆகும். இதில் 6 மாதத்திற்கு வங்கியின் சட்ட விதிகளின் படி முறையாக தவணையை திருப்பி செலுத்தியவர்களுக்கு கூடுதல் வட்டிக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும். இதுகுறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பாணை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொற்றுநோய் சமயத்தில் வட்டி தள்ளுபடி மூலம் ஏற்படும் மக்களின் சுமையை அரசாங்கமே ஏற்பது தான் ஒரே தீர்வாக இருக்கக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வெங்காயத்தைப் பாதுகாக்கும், பழங்கால வெங்காயப் படல் முறையில், விற்பனையும், விதை சேமிப்பும்!
Share your comments