1. செய்திகள்

தமிழகத்தில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7 தொழில் நிறுவனங்கள்! 8000 பேருக்கு வேலை!

KJ Staff
KJ Staff

Credit : The Hindu

தொழில்துறை சார்பில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, ரூ.10,062 கோடி முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (Employment) உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) அடிக்கல் நாட்டியுள்ளார்.

முதல்வரின் அறிக்கை

  1. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ரூ.5,512 கோடி முதலீட்டில் 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டங்களுக்கு நேற்று (23.10.2020) காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  2. தொழில்துறை சார்பில் திருவள்ளூர் - தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் (Sipkot Industrial Park) ரூ.600 கோடி முதலீட்டில் Wheels India நிறுவனத்தின் வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார். இதன்மூலம் 1,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.

1100 பேருக்கு வேலை

திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் இன்டக்ரேட்டு சென்னை பிசினஸ் பார்க் (Integrated Chennai Business Park (DP World) ) நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பார்க் (Logistics Park) திட்டத்திற்கு, காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் சுமார் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

சல்காம்ப் நிறுவனம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா (Nokia) தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த Salcomp நிறுவனத்தின் கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

Credit : Mint

அதானி தொழில் நிறுவனம்

தொழில்துறை சார்பில் திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Adani Gas நிறுவனத்தின், City Gas Distribution திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில், ரூ.150 கோடி முதலீட்டில் Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைப்பதற்கான, புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில் ரூ.250 கோடி முதலீட்டில் 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் (Shreevari Energy Systems) நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் கள்ளப்பாளையத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டத்திற்கு, அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.இதன் மூலம் சுமார் 300 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

வாழையின் விலை இனி உயருமா? குறையுமா? ஆய்வில் வேளாண் பல்கலைக்கழகம் தகவல்!

English Summary: 7 companies with an investment of Rs 1,298.20 crore in Tamil Nadu! Jobs for 8000 people!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.