1. செய்திகள்

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் தகவல்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
No Current Cut In Tamil Nadu

இந்திய மின்சந்தையில் உள்ள விலையின்படி தான் கொள்முதல் செய்துள்ளதாகவும். சிலர் விவரம் தெரியாமல் அரசுக்கு அவப்பெயர் சூட்டும் விதமாக குறுகிய நோக்கில் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடந்தது. இதில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்களில் மின்தடை ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்-அமைச்சர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவையடுத்து வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன்படி, எந்த இடங்களிலும் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி அதிகாரிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தின் ஒட்டுமொத்த நிறுவுதிறன் 4 ஆயிரத்து 320 மெகாவாட் ஆகும். இதில் கடந்த ஆட்சியில் 1,800 மெகாவாட் அளவு மட்டுமே உற்பத்தி செய்துள்ளனர். முதல்-அமைச்சரின் அறிவுரைகளை பின்பற்றி தற்போது நம்முடைய சொந்த உற்பத்தி 3 ஆயிரத்து 500 மெகாவாட் ஆக உயர்த்தி இருக்கிறோம். நம்முடைய ஒருநாள் சராசரி தேவை 320 மில்லியன் யூனிட் ஆகும். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 24.9.2021 முதல் 19.10.2021வரை நாம் சந்தையில் 397 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்துள்ளோம்.

இன்றைய சூழ்நிலைகளில் 6 ஆயிரத்து 200 மில்லியன் யூனிட் வினியோகம் செய்துள்ளோம். இந்த 397 மில்லியன் யூனிட் சந்தையில் கொள்முதல் செய்ததில் 65 மில்லியன் யூனிட் மட்டுமே ரூ.20-க்கு கொள்முதல் செய்தோம். இது மொத்த தேவைகளில் ஒரு சதவீதம் மட்டும் தான் இந்திய மின்சந்தையில் உள்ள விலையின் அடிப்படையில் தான் கொள்முதல் செய்துள்ளோம்.

சிலர் இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறுகிய நோக்கில் சில கருத்துகளை தெரிவிக்கின்றனர். கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் ஏற்பட்ட முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு ஏற்றவாறு மின்சாரத்துறை செயல்பட்டு வருகிறது என்று வி.செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:

கிராமங்களில் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்!

அக்டோபர் 20-22 வரை தமிழகத்தில் கனமழை! ஆரஞ்சு அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது!

 

English Summary: No more blackouts in Tamil Nadu - Minister informed! Published on: 21 October 2021, 09:56 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.