ரயில் டிக்கெட் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கும் திட்டம் இனிமேல் கிடையாது என மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. இதன் மூலம் பல காலம் வழங்கப்பட்டுவந்த இந்த சலுகை முடிவுக்கு வருகிறது.
ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக குழப்பம் நிலவி வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு அக்கறை காட்டாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை குறித்து மத்திய ரயில்வே துறை அஷ்விணி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டார்.
பொதுவாக நாட்டின் மூத்த குடிமக்கள் ரயில் கட்டணத்தில் 50 முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, கடந்த 2 ஆண்டுகளாக இச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மூத்த குடிமக்களும் ரயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல் கூடுதலாக செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது இந்த வசதியை 2020 மார்ச் மாதத்தில் இந்திய ரயில்வே ஒத்திவைத்தது. அதன் பின்னர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், கொரோனா தொற்றுநோய்க்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களின் ரயில் பயணங்கள் அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2020 மார்ச் 20 முதல் 2021 மார்ச் 31 வரை 1.87 கோடி மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஏப்ரல் 1, 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 4.74 கோடி பேர் பயணம் செய்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த விலக்கை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெளிவு படுத்தியுள்ளார். இதன் மூலம் மூத்தக் குடிமக்களுக்கு இனிமேல் ரயில் டிக்கெட்டில் ஏற்கனவே வழங்கப்பட்டச் சலுகை இனிமேல் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க...
கொய்யா இலை கொட்டிக்கிடக்கும் நன்மைகள்-Weight loss மேஜிக் பானம்!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
Share your comments