1. செய்திகள்

இனி இவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

R. Balakrishnan
R. Balakrishnan
Family pension

இறந்துபோன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறு ஒரு பிள்ளையை தத்தெடுத்து கொண்டால், அந்த பிள்ளை குடும்ப பென்சன் (Family Pension) பெறுவதற்கு தகுதி அற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடும்ப ஓய்வூதியம் (Family Pension)

இறந்துபோன அரசு ஊழியரை சார்ந்திருக்காதவர்களை குடும்பம் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது என நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஸ்ரீதர் சிமுர்கார். இவர் இறந்தபிறகு அவரது மனைவி ஒரு மகனை தத்தெடுத்துள்ளார். அவரின் பெயர் ஸ்ரீராம். இதையடுத்து, ஸ்ரீராம் தனக்கு உரிய குடும்ப பென்சன் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்துவிட்டார்.

இந்நிலையில், கடைசியாக அவரை, மறைந்த ஸ்ரீதர் சிமுர்காரின் குடும்பம் எனவோ, அவரை சார்ந்தவர் எனவோ கருத முடியாது என கூறி குடும்ப பென்சன் வழங்க அனுமதி மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். இவ்விவகாரம் முதலில் மும்பை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீராமை ஸ்ரீதரின் மகன் என கருதி குடும்ப ஓய்வூதியம் வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மும்பை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னர் இவ்வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்துக்கு சென்றபோது, மும்பை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஸ்ரீராம். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சட்டத்தின்படி, ஸ்ரீராமை ஸ்ரீதரின் குடும்பம் என கருத முடியாது என கூறி அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதி மறுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நற்செய்தி: விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்!

பழைய பென்சன் திட்டத்தில் இருக்கும் ஆபத்து: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

English Summary: No more family pension for them: Supreme Court action order! Published on: 20 January 2023, 10:17 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.