ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பல ரேஷன் கார்டுகளுக்கு இனி பொருட்கள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில்
ஏழை எளிய மக்கள் 3 வேளையும் பசியாற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, ரேஷனில், மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகம் உட்பட, நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம், பொது மக்களுக்கு குறைந்த விலையில், அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழை எளிய மக்கள் ரேஷனில் பயனடைந்து வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், முறைகேடாக, பொருட்களை பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
விதிகளின் மாற்றம்
இந்நிலையில், ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, ரேஷன் கடைகளில் தகுதி உடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மாறக் கூடும் எனத் தெரிகிறது.
இதற்காக, புதிய அளவு பட்டியல் கிட்டத்தட்ட தயாராக விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் போலியான முறையில் ரேஷனைப் பயன்படுத்திக் கொள்ளும் பலர் உள்ளனர். உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி வருகின்றனர்.அவர்களில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் பலர் உள்ளனர்.
கார்டுகள் ரத்து
இதனால் தான் தற்போது அரசு ரேஷன் கார்டு விதிகளை மாற்றப் போவதாகக் கூறப்படுகிறது. மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரைகளை மனதில் கொண்டு, புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாகத் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க...
ரயிலில் லக்கேஜிற்கு 6 மடங்கு அபராதம்- பயணிகளே உஷார்!
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!
Share your comments