1. செய்திகள்

இனி ஆன்லைன் தேர்வு கிடையாது: நேரடித் தேர்வு மட்டுமே!

R. Balakrishnan
R. Balakrishnan
No more online exams

தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன. தொற்று குறைந்த பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இரண்டாவது அலை (Second Wave) காரணமாக மீண்டும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

கனமழை

தற்போது வடகிழக்குப் பருவ மழை காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை (Semester Exam) நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரடித் தேர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து வகை செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடைபெற வேண்டும். இந்தத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, நடத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவு அனைத்து வகை பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அரசு ஆரம்ப பள்ளி அசத்தல்!

பள்ளி கட்டணம் செலுத்த EMI வசதி!

English Summary: No more online exams: only direct exams! Published on: 16 November 2021, 07:15 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.