நாடு முழுவதும் ஒருசிலருக்கு மட்டும் ரேசன் கடைகளில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் அரிசி மற்றும் கோதுமை நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இப்போது காண்போம்.
அரிசி, கோதுமை நிறுத்தம்
நாடு முழுவதும் ரேசன் கடைகளில் மானிய விலையில் பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக இதில் பல முறைகேடுகள் அதிகரித்து வருவதனால், இதனைத் தடுக்க புதிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்துள்ளது. அதாவது, மக்கள் தங்களுடைய ஆதார் கார்டை ரேசன் கார்டு உடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லை எனில், அவர்களுக்கு இந்த ரேசன் கடையின் எந்த சேவையும் வழங்கப்பட மாட்டாது.
இதனை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கான அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்த அவகாசம், தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசத்திற்குள் ரேசன் அட்டைதாரர்கள், தங்களுடைய ஆதார் கார்டை ரேசன் கார்டுடன் இணைத்திட வேண்டும். அப்படி செய்யவில்லை எனில், அவர்களுக்கு வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அரிசி மற்றும் கோதுமை போன்ற எந்த ஒரு ரேசன் பொருளும் கிடைக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ரேசன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு அரசின் “செழிப்பு” இயற்கை உரம்: விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!
Share your comments