1. செய்திகள்

மூங்கில் வெட்டுவதற்கு முன் அனுமதி தேவையில்லை: நிதின் கட்கரி

KJ Staff
KJ Staff
Credit : Medium

நாட்டின் மூங்கில் வளங்களை இன்னும் அதிக அளவில் பயன்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து (Central Road Transport) மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) இன்று வலியுறுத்தினார்.

மூங்கில் கண்காட்சி:

இணையக் கருத்தரங்கு (Onlinr Seminar) ஒன்றில் மெய்நிகர் மூங்கில் கண்காட்சியைத் (Bamboo exhibition) தொடங்கி வைத்து பேசிய அவர், போக்குவரத்து செலவுகளைக் குறைத்து, அதிக அளவில் மூங்கில் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

விரிவான மூங்கில் கொள்கை:

கட்டிடங்கள் மற்றும் உட்புற வேலைப்பாடுகள், கைவினைப் பொருட்கள், ஊதுவத்தித் தயாரிப்பு, துணிகள், உயிரி-எரிபொருள் (Bio-fuel) போன்ற பல்வேறு துறைகளில் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது என்று கட்கரி கூறினார். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் மூங்கில்கள் (Bamboo) அதிக அளவில் விளைவிக்கப்படுவதால், விரிவான மூங்கில் கொள்கை (Comprehensive bamboo policy) ஒன்றை வடிவமைக்குமாறு வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறையை அவர் கேட்டுக்கொண்டார்.

மூங்கில்களை வெட்ட அனுமதி தேவையில்லை:

மூங்கில்களை வெட்டுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்னும் விதியை (Rule) நீக்குமாறு தான் பிரதமரிடம் கேட்டுக் கொண்ட பிறகு, இதுதொடர்பான உத்தரவை வனத்துறை அதிகாரிகளுக்கு (Forest officials) பிரதமர் பிறப்பித்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மீனவ விவசாயிகள் பயனடைய, மீன் பொறிப்பகம் அமைக்கத் திட்டம்!

மத்திய வேளாண் சட்டங்களை முறியடித்திட ராஜஸ்தானில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம்!

English Summary: No permission required before cutting bamboo: Nitin Gadkari Published on: 05 November 2020, 09:27 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.