ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள அஞ்சுகோட்டை கிராமத்தில், அஞ்சுகோட்டை பெரியகண்மாய் இருக்கிறது. இந்த கண்மாயானது ராமநாதபுரம் மாவட்டத்திலேயே 3வது பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயின் நீர் ஆதாரத்தை பயன்படுத்தியே சுற்றியுள்ள 6 கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் நீர்பிடி விவசாய இடங்களை விவசாயம் செய்யப்போவதாக கூறிக்கொண்டு நிலங்களை விலைக்கு வாங்கி, அங்கே சோலார் பேனல் அமைத்து மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும், விவசாய நிலங்களில் சோலார் பேனல் அமைத்தால் கண்மாயில் நீர்வரத்து பாதிக்கப்படும், சூரிய ஒளியின் வெப்பமயத்தால் கண்மாய் நீரானது விரைவில் வற்றி, நீர் பாற்றாக்குறை ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிடும் இதனால். விவசாயம் பாதிப்படையும்.
எனவே, நீர்பிடிப்பு நிலத்தில் விவசாய பணிகள் செய்து கொள்ளட்டும், ஆனால் சோலார் பேனல் அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே, அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அஞ்சுகோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மேலும் படிக்க:
Share your comments