பேருந்துகளில் பயணம் செய்யும் சக பயணிகளுக்கு, தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் ஏதும் நிகழக் கூடாது என்பதற்காக, தமிழக அரசின் போக்குவரத்து துறை ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்துகளில் பயணம் செய்யும் போது செல்போனில் சத்தமாக பேச தடை விதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.
பேருந்து பயணம் (Bus Travel)
பேருந்துப் பயணத்தின் போது பயணிகள் செல்போன்களில் பாடல்கள் கேட்பதையும், சத்தமாக பேசுவதையும் அதிகமாக காண முடியும். வெகு சிலரோ காமெடி வீடியோக்களை பார்த்தபடி சிரித்துக் கொண்டே வருவார்கள். பலரும் இதைக் கண்டுகொள்வது இல்லை என்றாலும், பெரும்பாலான பயணிகள் எதுவும் சொல்ல முடியாமல் சகித்துக் கொண்டு செல்கின்றனர். நடத்துனர் சொல்வதையும் சில பயணிககள் கேட்பதில்லை. இதுபோல பேருந்தில் சத்தமாக பாடல்களை கேட்பது, பேசுவது போன்றவை அருகில் இருக்கும் பயணிகளுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.
சத்தமாக பேசக்கூடாது (No talking loudly)
இதனைத் தவிர்க்கவும், சகப் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், பேருந்துகளில் சத்தமாக மொபைல்போன் பேசுவதற்கு கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரயில்களில் கூட சத்தமாக பேசவதற்கோ, பாடல் கேட்பதற்கோ அனுமதி இல்லை என சமீபத்தில் இரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் சென்னையில் உள்ள மாநகரப் பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க, தமிழக அரசுக்கு போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி என்பவர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு மனு ஒன்றை அளித்திருக்கிறார். இந்த மனுவில், பேருந்தில் செல்லும் பயணிகள் சத்தமாக பாடல் கேட்பதாலும் போனில் பேசுவதாலும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகளில் உள்ளது போல, சென்னை மாநகரப் பேருந்துகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். சமூக ஆர்வலர் பொன்னுசாமியின் கோரிக்கையை பரிசீலித்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், இந்த கட்டுப்பாட்டை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த பரிந்துரைக் கடிதத்தில், பேருந்துகளில் பாடல் கேட்பது, சத்தமாக செல்போனில் பேசுவது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது தமிழக போக்குவரத்துக் கழகம்.
மேலும் படிக்க
மீண்டும் மின்வெட்டா? வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு!
2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் இரயில்: இரயில்வே மந்திரி அறிவிப்பு!
Share your comments