டெஸ்க்டாப் மற்றும் வெப் ப்ரோசர்ஸ் உட்பட 4 சாதனங்களை உங்கள் கணக்கில் இணைக்க WhatsApp இப்போது உங்களை அனுமதிக்கிறது. உங்கள் உரையாடல்களை ஒத்திசைத்து, அவற்றை எங்கிருந்தும் எளிதாக அணுகலாம்!
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் (Whatsapp), பிளாட்ஃபார்மில் பயனர் அனுபவத்தை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கு புதிய அப்டேட்களை செய்து வருகிறது. உங்கள் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் இணைக்கும் அம்சத்தை WhatsApp பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும், புதிய அப்டேட் மூலம் பயனர்கள் நான்கு வெவ்வேறு சாதனங்களிலும் ஒரு ஸ்மார்ட்போனிலும் ஒரே நேரத்தில் தங்கள் WhatsApp கணக்குடன் இணைந்திருப்பதை சாத்தியமாக்கியுள்ளது. எப்படி என்பதை பார்க்கலாம்...
உடனடி-செய்தி அனுப்பும் தளமானது இப்போது பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களிலும் ஒரு தொலைபேசியிலும் இணைக்க அனுமதிக்கும், இதனால் இணையம் மற்றும் டெஸ்க்டாப்பில் இணைந்திருப்பதை எளிதாக்குகிறது.
உங்களின் தனிப்பட்ட செய்திகள், மீடியா, அழைப்புகள் அனைத்தும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாப்பாக இருக்கும், அது உங்களின் இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களிலும் வேலை செய்யும். "உங்கள் தனிப்பட்ட செய்திகள், மீடியா மற்றும் அழைப்புகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனமும் வாட்ஸ்அப்புடன் எந்த வித ஆபாயமுமின்றி இணைகிறது, அதே நேரத்தில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பார்க்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் அதே அளவிலான தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பேணுகிறது" என வாட்ஸ்அப் கூறியது.
இணைக்கப்பட்ட சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த, உங்கள் ஸ்மார்ட்ஃபோன் இணைக்கப்பட்டிருக்கவோ அல்லது ஆன்லைனில் இருக்கவோ வேண்டும் என்கின்ற அவசியமில்லை. இருப்பினும், 14 நாட்களுக்கு மேல் உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தாவிட்டால், இணைக்கப்பட்ட சாதனங்களில் இருந்து Whatsapp Account தானாகவே வெளியேறும்.
மற்றொரு சாதனத்தில் திறக்கப் பட்ட அக்கவுன்டை எவ்வாறு லாக் அவுட் செய்வது?
இந்த அம்சத்தைப் பயன்படுத்த அல்லது ஏதேனும் புதிய சாதனத்தை உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இணைக்க, உங்கள் ஸ்மார்ட்போனை உடனடி-செய்தி அனுப்பும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் வாட்ஸ்அப்பை எங்கு இணைத்துள்ளீர்கள் என்று தெரியாவிட்டால், உங்கள் வாட்ஸ்அப் அமைப்புகளுக்குச் சென்று, இணைக்கப்பட்ட சாதனங்களைக் கிளிக் செய்து, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை இணைத்துள்ள அனைத்து சாதனங்களையும் மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் கணக்கை அகற்ற விரும்பினால், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனத்தின் மீது கிளிக் செய்து, 'லாக் அவுட்' விருப்பத்தைத் தட்டவும்.
இதற்கிடையில், மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளமானது குழுக்களுக்கான இரண்டு புதிய புதுப்பிப்புகளை உருவாக்கியுள்ளது, இது நிர்வாகிகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை வழங்குகிறது, அதே நேரத்தில் மக்கள் தங்கள் தொடர்புகளுடன் பொதுவான குழுக்களைக் கண்டறிய அனுமதிக்கிறது.
குழுவுடன் தொடர்புடைய புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வாட்ஸ்அப்பில் உலகளவில் வெளிவரத் தொடங்கும்.
வாட்ஸ்அப்பில் மற்ற சாதனங்களை இணைப்பது எப்படி? [How to link multiple devices on WhatsApp]
- உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் முதன்மை சாதனத்தில் WhatsApp ஐத் திறக்கவும்.
- "Settings" என்பதற்குச் சென்று "Linked Devices" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "Link a New Device" என்பதைத் தட்டவும் மற்றும் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- விண்டோஸ் டெஸ்க்டாப் போன்ற இரண்டாவது சாதனத்துடன் இணைக்க, WhatsApp Web (web.whatsapp.com) இணையப் பக்கத்தைத் திறக்கவும்.
- உங்கள் இரண்டாவது சாதனம் மூலம் இணையப் பக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
- சாதனங்கள் sync ஆகும் வரை காத்திருக்கவும். உங்கள் சேட்கள் இரண்டாவது சாதனத்தில் தோன்றும்.
- மேலும் சாதனங்களை இணைக்க அதே செயல்முறையை மீண்டும் செய்யவும்.
- நீங்கள் 4 சாதனங்களை ஒன்றாக இணைக்கலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை உங்கள் WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.
- WhatsApp பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் சாதனத்தின் இணைப்பை நீக்கலாம்.
Image Courtesy: Pixabay / Krishi Jagran
மேலும் படிக்க:
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி மாற்றம்- முடிவுகளை இணையத்தில் எப்படி பார்ப்பது?
Share your comments