ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மெட்டா நிறுவனமும் இணைந்து ஜியோ மார்ட் சேவையை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சேவை மூலம் இனி வாட்ஸ் அப் மூலம் மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
உலகில் முதல் முறையாக இவ்வாறான end to end ஷாப்பிங் சேவையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் நுகர்வோர் வாட்ஸ் அப் மூலம் ஜியோ மார்ட்டில் இருக்கும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் இருக்கும் கேட்டலாக்கில் மளிகை பொருட்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும். அதனை மெசேஜ் பாக்ஸிலேயே தேர்வு செய்து ஆர்டர் செய்துக் கொள்ளலாம். அதற்கான பில்லையும் கூட அதிலேயே செலுத்தும் வசதியும் வாட்ஸ் அப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ மார்ட் உடைய 7977079770 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்து மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இது குறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில், “ஜியோமார்ட் உடன் இணைந்து இந்தியாவில் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளோம். இதுவே வாட்ஸ்ஆப்பின் முதல் end to end ஷாப்பிங் அனுபவம் என தெரிவித்தார். மக்கள் இப்போது ஜியோமார்ட்டிலிருந்து மளிகை சாமான்களை வாட்ஸ் அப் சேட் பாக்ஸிலேயே வாங்கி கொள்ளலாம். இந்த முன்னெடுப்பு வரும் ஆண்டுகளில் மக்கள் மற்றும் வணிகங்களின் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.” என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி "இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமுதாயமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. 2020 ஆம் ஆண்டில் ஜியோ நிறுவனம் மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தபோது, இந்தியர்களில் ஆன்லைன் பரிவர்த்தனையை எளிமையாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இணைந்தோம். அதன் வெற்றிக்கான சாட்சியே இந்த வாட்ஸ் அப் - ஜியோ மார்ட் சேவை" என தெரிவித்தார்.
மேலும் படிக்க:
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
Share your comments