Paytm மூலம் சமையல் சிலிண்டரை புக் செய்தால் ரூ.100 கேஷ் பேக் பெற முடியும். இதை எப்படி பெறுவது என்பதை தெரிந்துகொள்வோம்.
உயரும் சிலிண்டர் விலை
மாதாந்திர பட்ஜெட் பட்டியலில் முதலிடம் பிடிப்பது மளிகை சாமான்கள் என்றால், அதற்கு அடுத்த இடம் எப்போதுமே சிலிண்டர்களுக்கு தான். இன்றைய சூழ்நிலையில், சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து முறை உயர்த்தப்பட்டுள்ளது
தற்போதைய நிலவரப்படி, சமையல் சிலிண்டரின் விலை ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் கேஷ் பேக் போன்ற சலுகைகளை பல்வேறு மொபைல் ஆப் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
Paytm கேஷ் பேக் ஆஃப்பர்
Paytm app மூலம் நீங்கள் சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்து வாங்கினால் உங்களுக்கு 100 ரூபாய் Cash back கிடைக்கும். Paytm app மூலம் முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பெறுவது? (How to get)
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் மொபைலில், Paytm appயை Download செய்துவிட்டு அதன்மூலம் LPG சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள். அதில் பாரத், இன்டேன், ஹெச்.பி (Bharat Gas, Indane and HP Gas) ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் இருக்கும்.
இதில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது LPG ID நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும். மார்ச் 31ஆம் தேதிக்குள் புக் செய்யப்படும் ஒரே ஒரு சிலிண்டருக்கு மட்டுமே இந்த சிறப்புச் சலுகை அளிக்கப்படும் .
மேலும் படிக்க...
Share your comments