1. செய்திகள்

பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!

R. Balakrishnan
R. Balakrishnan
Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old pension scheme) மீண்டும் அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய ஓய்வூதிய திட்டம் பற்றிய விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என நாடாளுமன்ற மக்களவையில் சர்மிஷ்டா சேதி எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார்.

பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)

2003 டிசம்பர் 22 தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவால் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு நிலையான முறையில் ஓய்வூதியம் வழங்கவும், சிறு சேமிப்புகள் வாயிலாக நல்ல முதலீடுகளை மேற்கொள்ளவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ராணுவ படையினர் தவிர அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 2004 ஜனவரி 1 முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு தொகை அவர்களின் சம்பளத்தில் 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பங்களிப்பு தாமதமானால் அல்லது செலுத்தப்படவில்லை எனில் அதற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. வருமான வரி சலுகைகளும் கிடைக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு இந்திய அரசின் பரிசீலனையில் எந்த திட்டமும் இல்லை என்று நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

உச்சத்தில் தங்கம் விலை: 50,000 ரூபாய் வரை உயரும் என அதிர்ச்சித் தகவல்!

English Summary: Old Pension Scheme: This is the Central Government's Answer! Published on: 21 March 2023, 02:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.