
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு ஒமிக்ரான் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் (Omicron)
ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. அதிலும்
குறிப்பாக உலக வல்லரசு நாடான அமெரிக்காவை பதறவைத்து வரும் ஒமிக்ரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு படுவேகமானப் பரவி வருகிறது.
புதிய உச்சம் (New peak)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு 10 லட்சம் (Impact 10 lakhs)
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின்படி, 10,42,000 என்ற எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ளது.
முந்தைய உச்சம் (Previous peak)
அமெரிக்காவில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி 5,72,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது இதற்கு முன்பு இதுவரை இல்லாத பாதிப்பாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையை விட இரு மடங்கு தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments