1. செய்திகள்

15 நாடுகளில் வேகமாகப் பரவும் ஒமிக்ரான் - உயிரிழப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : Maalaimalar

தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ் தாக்கினால், உயிரிழப்பு அதிகரிக்கும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒமிக்ரான் 

தென் ஆப்ரிக்காவில் அறிகுறியற்ற கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரிக்க துவங்கியது. அடுத்தடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பி.1.1.529 என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஒமிக்ரான் என, உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

15 நாடுகளில் (In 15 countries)

இந்த புதிய வகை வைரஸ் 'ஸ்பைக்' புரதத்தில் 30க்கும் அதிகமான முறை உருமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இது வேகமாக பரவம் தன்மை உடையதாகவும், தடுப்பூசியின் செயல் திறனுக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கவலைத் தெரிவித்தனர். முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 15 நாடுகளுக்கு வேகமாகப் பரவிவருகிறது.

அரசு அறிவுறுத்தல் (Government Instruction)

இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது. இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ‘ஒமிக்ரான்’ வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், விமான நிலைய இயக்குனர்கள் சென்னை மாநகராட்சி ஆணையைர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

மிகப்பெரியத் தவறு

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முக கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

அதிக உயிரிழப்பு (More casualties)

ஒமிக்ரான் வைரஸ் இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.
ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்பை உருவாக்கிவிடும்.

எனவே இதைக் கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

தடுப்பூசிக்கு கட்டுபடாத புதிய வகை வைரஸ் ''ஒமிக்ரான்'': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

English Summary: Omigron, which is spreading fast in 15 countries, will increase the death toll! Published on: 30 November 2021, 10:42 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.