1. செய்திகள்

ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை திட்டம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tamil Nadu Police

ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெறும் இரண்டு நாள் சிந்தனை முகாமில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உள்நாட்டு பாதுகாப்பு, மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு, சைபர் பாதுகாப்பு போன்றவை ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது, "இந்த சிந்தனை முகாம் நிகழ்வு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மாநிலங்களுக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் முழு பொறுப்பு உள்ளது. மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் இணைந்து செயலாற்ற வேண்டும். உளவுத்துறையும், காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், நாட்டின் காவலர்களுக்கு ஒரே நாடு, ஒரே சீருடை என்பது சாத்தியமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

இதை நான் உங்கள் மீது திணிக்க விரும்பவில்லை. இந்த யோசனை 5 ஆண்டுகளிலோ, 50 ஆண்டுகளிலோ, 100 ஆண்டுகளிலோ எப்போது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம். ஆனால் இந்த யோசனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றே கூறுகிறேன். நாட்டிற்கு எதிரான சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்.

ஒரே போலி செய்திகூட நாட்டில் புயலை உருவாக்கிவிடலாம். எனவே, மக்களுக்கு ஒரு செய்தியை பார்த்ததும் அப்படியே நம்பி பார்வர்டு செய்வதற்கு முன்பு. அது உண்மை தானா என்பதை சிந்தித்து பார்க்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

போலி செய்திகளை கண்டறிவதில் தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்காற்றும். எனவே, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையில்லாத பழைய சட்டங்களை நீக்கி காலத்திற்கு ஏற்ற சட்டங்களை கொண்டுவருவதில் மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். காவல்துறையில் தொடர் சீர்திருத்தங்கள் தேவை." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் படிக்க:

குரூப் 2 ரிசல்ட் தாமதம் ஏன்? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

பக்கத்தில் செல்போனை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்

English Summary: One country, one police uniform scheme Published on: 28 October 2022, 08:16 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub