1. செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பும் விண்கலம்- பெயர் பொறிக்க ஒரு கோடி பேர் முன்பதிவு

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா (NASA)அனுப்பும் விண்கலத்தில் தங்கள் பெயர்களை பொறிக்க, இதுவரை ஒரு கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றான செவ்வாய் கோளில், மனிதன் உயிர்வாழ்வதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது குறித்த ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் ஒருபுறம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இதுதொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்நிறுனத்தின் ஆராய்ச்சிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

இதன் ஒருபகுதியாக, வரும் 2026ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு, புதிய விண்கலத்தை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, அனுப்பப்பட உள்ள இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, 'நாசா' ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, உலகம் முழுவதும், ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். விண்ணப்பிப்போருக்கு, அவரவர் பெயர்களுடன் கூடிய விமான பயணச்சீட்டையும் நாசா அன்பு பரிசாக அளிக்கிறது 

விரும்புவோர், https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020/ என்ற இணையதளம் மூலம், பெயர்களை பதியலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

எலக்ட்ரான் கதிர்வீச்சை பயன்படுத்தி, பதிவு செய்யப்படும் பெயர்கள் சிறிய சிலிக்கான் சிப்- (Chip)பில் பொறிக்கப்படும். இந்த சிப் தலைமுடியைவிட மிகக் சிறியதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், இந்த பெயர் பொறிக்கும் திட்டத்தை, 'நாசா' அறிமுகம் செய்தது.

ஆனால் நாடுமுழுவதும் தற்போது கொரோனா தொற்று அலை வீசி, ஊரடங்கை அமல்படுத்தியுள்ளபோதிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ்அப்' மூலம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சாதாரண விஷயத்திற்கே, பெயர் பொறிப்பு என்றால், தங்கள் பெயரைப் பொறிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் இது அமெரிக்காவின் விண்கலமாச்சோ, விட்டுவைக்க முடியுமா? யாருக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே விரும்புகிறவர்கள் அனைவரும் முடிந்தவரை முயற்சிக்கலாம்.

மங்கள்யான் (Mangalyaan)

இதனிடையே செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (Isro) சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய்கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

அந்தவரிசையில் செவ்வாய்க்கு மிக அருகில் இருக்கக்கூடிய அதன் மிகப்பெரிய துணைக்கோளான போபோஸை (Photos), மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த படங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கிலோமீட்டர் தூரமும்,‘போபோஸ்’ கோளில் இருந்து4,200 கிலோ மீட்டர்  தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

English Summary: One Crore People Registered their name for NASA Spacecraft to enter Mars Published on: 09 July 2020, 08:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.