காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக மக்களைக் காக்கும் காவலர்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வர வேண்டிய கட்டாயம் நிலவியது. இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் நோய்வாய்ப்படுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. எனவே, காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை (One day leave per week) அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது.
காவலர்களுக்கு விடுமுறை
கடந்த ஆட்சியில் அவர்களின் கோரிக்கையை ஏற்கப்படாமலேயே இருந்தது. நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இந்நிலையில், காவலர்களின் பிரச்சனையை தீர்க்க எண்ணிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின் போது காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி 2ஆம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும்.
மேலும் படிக்க
அரசு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!
வன விலங்குகளின் மருத்துவ சிகிச்சைக்கு 3 இடங்களில் மையங்கள்!
Share your comments